wb minister

மேற்கு வங்கத்தில், இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால் அம்மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பு நிலவிவருகிறது. கடந்தவருட இறுதியில் அமித்ஷா தலைமைலயிலான பொதுக்கூட்டத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமுல்காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்சுவேந்து அதிகாரி, மேலும் 6 திரிணாமுல்காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களுடன் பாஜகவில்இணைந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து, இம்மாததொடக்கத்தில், மம்தாபானர்ஜிகட்சியைச் சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்லக்ஷ்மிரத்தன் சுக்லா,தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் எம்.எல்.ஏவாகதொடர்கிறார்.

இந்தநிலையில், மேற்கு வங்கத்தின் வனத்துறை அமைச்சர்ராஜீப் பானர்ஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நான் சிலகாலமாக மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் இந்த முடிவை(ராஜினாமா) எடுக்க வேண்டியிருந்தது. இது எனக்கு வேதனையளிக்கிறது. என் இதயத்தை உடைக்கிறது, ஆனால் நான் இதனை செய்ய வேண்டியிருந்தது. இத்தனை ஆண்டுகளாக என்னை வழிநடத்திய மம்தா பானர்ஜிக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்" எனகூறியுள்ளார்.

Advertisment

ஆளும்திரிணாமுல்கட்சியைச்சேர்ந்தஅமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது, மேற்கு வங்க அரசியல் பரபரப்பைஎகிற வைத்துள்ளது.