Advertisment

பாஜகவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸுக்குத் தாவத் தயாராகும் மேலும் ஒரு எம்.எல்.ஏ? 

bjp mla

மேற்கு வங்கத்தில் இந்தாண்டுநடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல்காங்கிரஸ் மாபெரும்வெற்றியைப் பெற்று ஆட்சியைத்தக்கவைத்துக் கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தின் முதல்வரானார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து மேற்குவங்கத்தில் பாஜக சார்பாக வென்ற நான்கு எம்.எல்.ஏக்கள் இதுவரை திரிணாமூல்காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதற்கிடையே கடந்த சனிக்கிழமை முன்னாள் மத்திய இணையமைச்சரும், பாஜக எம்பியுமானபாபுல் சுப்ரியோதிரிணாமூல்காங்கிரஸில் இணைந்தார். இந்தநிலையில் மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ திரிணாமூல்காங்கிரஸில் இணையலாம்எனத்தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

மேற்குவங்கத்தின்ராய்கஞ்ச் தொகுதி பாஜக எம்.எல்.ஏ-வானகிருஷ்ண கல்யாணி, திரிணாமூல் காங்கிரஸில் இணையப்போவதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த போது எம்.எல்.ஏ கிருஷ்ண கல்யாணி, பாஜகவில் இருந்து வெளியேறியவர்களுக்குஆதரவாகப் பேசியதுடன், வேறு கட்சியில் இணைவது குறித்து யோசித்து வருவதாகவும்கூறினார்.

இதுதொடர்பாகஅவர், "பா.ஜ.க.வை விட்டு வெளியேறுபவர்களுக்கு, கவனத்தில் கொள்ளப்படாத கடுமையாக குறைகள் இருக்கும். கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் நான் விலகிவிட்டேன். நான் எழுப்பிய பிரச்சனைகளுக்கு இதற்குள் தீர்வு காணவேண்டும்அல்லது என்ன செய்யலாம் என நான் யோசிப்பேன் என்று கட்சிக்கு ஒரு கால அவகாசத்தையும் வழங்கியுள்ளேன்" எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் வேறு ஒரு கட்சியில் சேருவீர்களாஎன்ற கேள்விக்கு அவர், தனக்கு முன் உள்ள வாய்ப்புகள் குறித்து யோசிப்பதாகவும், தனதுமுடிவை சரியான நேரத்தில் பொதுமக்களுக்குதெரிவிப்பேன் எனவும்கூறினார். இதன்தொடர்ச்சியாகஅவர் திரிணாமூல்காங்கிரஸில் இணையவுள்ளதாகத்தகவல்கள் வெளியாகி வருகின்றன.

உத்தர தினபூர் மாவட்ட திரிணாமூல்காங்கிரஸ் தலைமை,கிருஷ்ண கல்யாணி தங்களது கட்சிக்கு வந்தால் வரவேற்போம் எனத்தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

west bengal Mamata Banerjee tmc BJP MLA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe