up minister

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில் அக்கட்சியைச் சேர்ந்த சுவாமி பிரசாத் மௌரியா, நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் வரும் 14 ஆம் தேதி சமாஜ்வாடி கட்சியில் சேரவுள்ளதாகஇன்று அறிவித்தார்.

Advertisment

இதற்கிடையேசுவாமி பிரசாத் மௌரியாவை தொடர்ந்து ஐந்து பாஜக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இந்தநிலையில் தற்போது அமைச்சர் தாரா சிங் சவுகானும் தனது பதவியை ராஜினாமாசெய்துள்ளார். சுவாமி பிரசாத் மௌரியாவைதொடர்ந்து சில பாஜக எம்.எல்.ஏ.க்களும்அமைச்சர்களும் பாஜகவில் இருந்துவிலகி சமாஜ்வாடியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கியுள்ள நேரத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள் பதவி விலகி வருவதும், எம்.எல்.ஏ.க்கள் கட்சியிலிருந்து விலகுவதும் பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சமாஜ்வாடி கட்சியுடன்கூட்டணி வைத்து உத்தரப்பிரதேச தேர்தலைசந்திக்கவுள்ளதாக நேற்று அறிவித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சியில் 13 எம்.எல்.ஏக்கள் இணையவுள்ளதாககூறியிருப்பது கவனிக்கத்தக்கது.