Advertisment

வட மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

Announcement of new restrictions in the Northern States!

Advertisment

மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஒடிஷாவைத் தொடர்ந்து, மஹாராஷ்ட்ரா மாநிலத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரை இரவுநேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று (25/12/2021) முதல் ஜனவரி 2ஆம் தேதிவரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஒரே இடத்தில் அதிக அளவு மக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக ஒடிஷா அரசு அறிவித்துள்ளது. மேலும், சொகுசு விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பூங்காக்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா மாநிலத்தில் இதுவரை நான்கு பேருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாகஇந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இரவு 09.00 மணி முதல் காலை 06.00 மணி வரை பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடம், ஸ்பாக்களில் 50% பேருக்கு மட்டும் அனுமதி என மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.

India lockdown OMICRON
இதையும் படியுங்கள்
Subscribe