Advertisment

"அரசு உறுதியளித்தது, ஆனால் நிறைவேற்றவில்லை" - உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே..

anna hazare

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, டெல்லியில் மாபெரும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இன்றோடு 13 ஆம் நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. மேலும், இன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக, நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

Advertisment

இந்தநிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார். டெல்லியில் நடைபெறும் போராட்டம் நாடு முழுவதும் பரவவேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள அன்னா ஹசாரே, விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற, மத்திய அரசின் மீது அழுத்தம் உருவாக்கப்பட வேண்டுமெனவும் அதற்கு விவசாயிகள் வீதிக்கு வந்து போராடவேண்டுமெனவும் கூறியுள்ளார்.

Advertisment

மேலும்,எம்.எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைத்தபடி, தேசிய வேளாண் விளைபொருட்கள் மற்றும் விலை நிர்ணயக் குழுவிற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கவேண்டும் எனவும், அரசு இது தொடர்பாக ஏற்கனவே உறுதியளித்தது, ஆனால் அதனை நிறைவேற்றவில்லை எனவும் கூறியுள்ளார்.

anna hazare delhi chalo farmers bill
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe