ஊழலுக்கு எதிராக லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாசட்டத்தை கொண்டுவரவேண்டும் என்று அன்னா ஹசாரே மீண்டும் காலவரையற்றஉண்ணாவிரதத்தைதொடங்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna hazare.jpg)
சமூக ஆர்வலர். அன்னா ஹசாரே கிட்டத்தட்டஏழாண்டுகளுக்குபின் மீண்டும் காலவரையற்றஉண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ஊழலுக்கு எதிராக 2011ம் ஆண்டு உண்ணாவிரதத்தை தொடங்கினார், இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல், மக்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். இதையடுத்து அப்போதைய மத்திய அரசு சட்டம் அமைக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஏழு ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படாததால் மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளதாக கூறியுள்ளார். அன்று இந்த சட்டத்தை கொண்டுவருவோம் என தேர்தல் அறிக்கை அளித்த பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தும் நிறைவேற்றவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஏழாண்டுகளுக்குமுன் போராட்டம் நடந்த அதே ராம்லீலா மைதானத்தில்தான் இப்போதும் போராட்டம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us