Advertisment

மஹாராஷ்ட்ரா அரசின் முடிவுக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் - அன்னா ஹசாரே அறிவிப்பு!

ANNA HAZARE

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் அமைச்சரவை, சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஸ்டோர்களிலும் ஒயின் விற்க அனுமதிக்கும் முன்மொழிவுக்கு கடந்த மாத இறுதியில் அனுமதியளித்தது. ஆனால் சூப்பர் மார்க்கெட்டுகளிலும்,ஸ்டோர்களிலும்ஒயின் விற்பது வருங்கால தலைமுறைக்கு ஆபத்து என கூறி அன்னாஹசாரே மஹாராஷ்ட்ராஅரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisment

இந்தநிலையில்கடந்த சனிக்கிழமையன்று, சூப்பர் மார்க்கெட்டுகளிலும்,ஸ்டோர்களிலும்ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து மஹாராஷ்ட்ராஅரசுக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறிய அன்னாஹசாரே, தற்போது மீண்டும் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அரசு தனது முடிவை திரும்பப்பெறவிட்டால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாகவும்அறிவித்தார்.

Advertisment

இந்தநிலையில்அன்னாஹசாரே, சூப்பர் மார்க்கெட்டுகளிலும்,ஸ்டோர்களிலும்ஒயின் விற்க அனுமதியளிக்கும் முடிவுக்கு எதிராக வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe