/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/download-(6)-in_1.jpg)
எரிக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அணில் அம்பானி திரும்ப செலுத்தாததால் அவர் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன. இந்நிலையில் அணில் அம்பானியின் ஆர். காம் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை தரவில்லை என எரிக்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் அந்த தொகையை வழங்கவில்லை. மேலும் ஆர். காம் நிறுவனம் திவால் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று அணில் அம்பானி ஆஜரானார். மேலும் இந்த தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி போட்டு எரிக்சன் நிறுவனத்திற்கு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)