Advertisment

மூழ்கும் ரிலையன்ஸை மீட்டெடுக்குமா அம்பானியின் புதிய திட்டம்...?

எரிக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை அனில் அம்பானி திரும்ப செலுத்தாததால் அவர் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த இரு நிறுவனங்களும் இணைந்து பணிபுரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டன.

Advertisment

ambani

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் மின்னணு பொருட்கள் கொள்முதலில் அனில் அம்பானியின் ஆர். காம் நிறுவனம் தங்களுக்கு தரவேண்டிய நிலுவை தொகை 550 கோடி ரூபாயை தரவில்லை என எரிக்சன் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் 2018 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் ஆர். காம் நிறுவனம் எரிக்சன் நிறுவனத்திற்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இதுவரை அந்நிறுவனம் அந்த தொகையை வழங்கவில்லை. மேலும் ஆர். காம் நிறுவனம் திவால் எனவும் அறிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது எரிக்சன் நிறுவனம். இதில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

அதன்படி 550 கோடி ரூபாயில் நிலுவை தொகையான 453 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் எரிக்சன் நிறுவனத்திற்கு தரவில்லை என்றால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 மாதங்கள் சிறை செல்ல நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக ரூ. 260 கோடியை திரட்ட அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு கடன் வழங்கியவர்களிடம் அந்நிறுவனம் ஒப்புதலை கோரியுள்ளது.

இந்த பணத்தை நேரடியாக எரிக்ஸன் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 200 கோடி ரூபாய் தேவை என்பதால் அதனை 4 வாரங்களுக்குள் திரட்டவும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

anil ambani mukesh ambani
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe