தாலி கட்டும் நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண்! 

andra pradesh marriage incident police investigation

தாலிகட்டும் வேளையில் மணமகன் மடியிலே மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்திருக்கிறார்.

ஆந்திர மாநிலம், மதுரவாடா பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞரணித் தலைவரான சிவாஜி என்பவருக்கும், ஸ்ருஜனா என்பவருக்கும் திருமண விழா நடந்துக் கொண்டிருந்தது. தாலி கட்டுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு திடீரென மணமகள் ஸ்ருஜனா, சிவாஜி மடியில் மயங்கி விழுந்தார். அங்கிருந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதைத் உறுதிசெய்தனர்.

மருத்துவ பரிசோதனை முடிவில் மணமகள் நஞ்சு அருந்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

couple incident marriage
இதையும் படியுங்கள்
Subscribe