Advertisment

பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் கூட்டம்.... சந்திரபாபு நாயுடு அதிரடி!

17-வது மக்களவை தேர்தலின் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே -19 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. பின்பு மே -23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அனைத்து மாநில கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒவ்வொரு மாநிலத்திற்கும் சந்திரசேகர ராவ் சென்று அங்கு அரசியல் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் வரும் நிலையில் , ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மே 21 ஆம் தேதி டெல்லியில் மாநில கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிராக டெல்லியில் மாநில கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் , பாஜகவுக்கு மாற்று காங்கிரஸ் கட்சி மட்டுமே என உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

Advertisment

naidu and kcr

இதனால் தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் மற்றும் ஆந்திரா முதல்வர் இருவரும் மத்தியில் அடுத்து யார் ஆட்சி அமைப்பது? மற்றும் அடுத்த பிரதமர் யார்? என்ற தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. அதே போல் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக மாநில கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு என்ன காரணம்? என்றால் கட்சிக்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தவும், பாஜகவுக்கு எதிராக பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்யவும் , அதற்கான ஒப்பந்தத்தை கூட்டத்தில் இறுதிச்செய்யவும் , வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் அன்று எதிர்கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றும் எனில் அன்றே ஆட்சி அமைக்க தேவையானதை இந்த கூட்டத்தில் இறுதி செய்ய சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியாவில் அடுத்த பிரதமர் யார்? என்ற நிலைப்பாட்டை தேசிய அரசியலில் தென்னிந்திய முதல்வர்கள் முன்னெடுத்து செல்வது இதுவே முதல் முறை ஆகும்.

Advertisment

KCR Chandrababu Naidu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe