Advertisment

அப்படிப்பட்ட அப்பாவே தேவையில்ல... ஃபோன்ல அவர் நம்பரை டெலிட் பண்ணுமா... கதறி அழுத தாயிடம் சொன்ன பெண் குழந்தை...

andhra Tirupati

Advertisment

ஆந்திர மாநிலம் திருப்பதி காவல்நிலையத்திற்குச் சென்ற சரஸ்வதி என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். தனக்கு வெங்கடாஜலபதி என்ற கணவரும், 8 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தன் கணவர் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகவும், தன் கணவரைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்காக போலீசார், வெங்கடாஜலபதியை அழைத்தனர். காவல்நிலையத்திற்கு காதலியுடன் வந்த வெங்கடாஜலபதி, தன் காதல் மனைவியுடன் செல்வதாகக் கூறியிருக்கிறார். இதனால் இரு பெண்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார், மகளிர் காவல்நிலையத்தில் இந்தப் புகாரை அளிக்குமாறு கூறியுள்ளனர்.

andhra Tirupati

Advertisment

அப்போது கணவர் வெங்கடாஜலபதி தனது காதல் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். தங்களுடன் இருங்கள், உங்கள் மகளைப் பாருங்கள் என சரஸ்வதி, கணவரின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்க முயற்சித்தார். அப்போது மகளும் 'டாடி','டாடி' என்று தந்தையை அழைத்துக் கொண்டே இருந்தார். எப்படியாவது மகளைப் பார்த்தோ, தான் கெஞ்சுவதைப் பார்த்தோ தங்களுடன் வந்துவிடுவார் என்று சரஸ்வதி நம்பினார்.

andhra Tirupati

இவற்றை கண்டுகொள்ளாமல் இருசக்கர வாகனத்தில் காதல் மனைவியுடன் அவர் பறந்தார். அப்போது 'டாடி....','டாடி....' என எட்டு வயது மகள் அழைத்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் கண் கலங்கினர். இருசக்கர வாகனத்தில் வேகமாகப் புறப்பட்ட கணவனை துரத்திச் சென்ற சரஸ்வதி அவர் மீது செல்போனை தூக்கி எறிந்து ஆவேசகமாகக் கத்தினார். பின்னர் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு நிலைதடுமாறியபடியே நடந்து வந்த சரஸ்வதி சாலையின் நடுவே அமர்ந்து தனக்கு நியாயம் வேண்டும் கதறினார். கதறி அழுத தாயின் அருகே வந்த மகள், செல்போனில் இருந்து அப்பா நம்பரை டெலிட் பண்ணுமா? அந்த நம்பர் வேண்டாம்மா என ஆவேசமாகக் கூறினார்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், போலீசாரே உடனடியாக மகளிர் காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டோ அல்லது நேரில் அழைத்துச் சென்றோ இந்தப் புகாரை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றியிருக்கலாம். முதல் மனைவியிடம் விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கலாம், போலீசாரே உதவியிருக்கலாம் என்றனர்.

complaint wife husband Tirupati Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe