Advertisment

மனைவியின் நடத்தையில் சந்தேகம்... தலையை வெட்டி வாய்க்காலில் வீசிய கணவன் போலீஸில் சரண்...

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தலையை துண்டித்து கொலை செய்த கணவன். இச்சம்பவம் ஆந்திராவிலுள்ள விஜவாடா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

vijayawada

மணி கிராந்தி என்ற பெண்ணை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு பிரதீப் என்பவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். பின்னர், பிரதீப்பிற்கு தன்னுடைய மனைவியின் மேல் சந்தேகம் அதிகமாக எழ, இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் பிரதீப் மணி கிராந்தியிடம் விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் மணி கிராந்தி கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

Advertisment

அவரை பின் தொடர்ந்து வந்த பிரதீப் உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மணி கிராந்தி ஒப்புக்கொள்ளவில்லை. உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த அரிவாலை எடுத்து சரமாரியாக மணி கிராந்தியை வெட்டியுள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்திருக்கிறார். இதன் பின் அவருடைய தலையை துண்டித்து கையில் எடுத்துகொண்டு தெருவில் இரத்தவெறியில் நடந்து சென்றுள்ளார். அதை பார்த்த அந்த தெருவாசிகள் பிதியில் அலறி அடித்து ஓடவும், வீட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டுள்ளனர்.

மணி கிராந்தியின் தலையை அருகிலிருக்கும் கால்வாயிலில் வீசிவிட்டு, போலீஸில் சரணடைந்துள்ளார் பிரதீப். இதையடுத்து மணி கிராந்தியின் உடலையும், கால்வாயில் தூக்கி வீசப்பட்ட தலையையும் கைப்பற்றிய போலீசார், கொலைக்கான காரணம் குறித்து பிரதீப்பிடம் விசாரித்து வருகின்றனர்.

crime husband vijayawada wife
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe