வகுப்பில் சேட்டை செய்த மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் இருவரை தலைமை ஆசிரியை தண்டித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

andhra school hm ties students

ஆந்திர மாநிலம் அனந்தபுரமு மாவட்டத்தில் உள்ள காதிரி பகுதியில் இருக்கும் நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக ஸ்ரீதேவி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் வகுப்பில் சேட்டை செய்ததாக கூறி அங்குள்ள மேசை கால்களில் மாணவர்களின் கை, கால்களை சேர்த்து கயிறு மூலம் கட்டியுள்ளார். மாணவர்கள் அழுதும், அவர்களை விடாமல் அவர் கட்டி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தற்போது குழந்தைகள் நல ஆணையம் வரை சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.