ADVERTISEMENT

ஆந்திராவில் கரோனா தொற்று விறுவிறு... கட்டுப்பாடு விதிக்க தயாராகும் மாநில அரசு!

07:41 PM Apr 08, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT



உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 13 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 28 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் குறைவான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,558 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 9,15,548 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,268 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 915 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 6 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 8,93,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT