/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parachut.jpg)
பயிற்சியின் போது ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்தகடற்படை வீரர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கடற்படையை சேர்ந்த சிறப்பு படை வீரர் சந்திரகா கோவிந்த் (வயது 31). இவர் மேற்கு வங்கத்தில் ஹெலிகாப்டரில் வானில் பறந்தவாறு பாராசூட் மூலம் குதித்து தரை இறங்குவதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது எதிர்பாராதவிதமாக பாராசூட் சரியாக செயல்படாமல் இருந்துள்ளது.
இதனால்சந்திரகா கோவிந்த் கீழே விழுந்து பலியானார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இவரின் உடலானது சொந்த ஊருக்குகொண்டு வரப்பட்டுநாளைஅடக்கம் செய்யப்படவுள்ளது. இச்சம்பவம் கடற்படை வீரர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)