andhra pradesh fire incident shopping mall

ஆந்திராவில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தர்ஷி நகரில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஆடை, மளிகை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் காலை சுமார் 5 மணியளவில் வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் கடையில் இருந்த ஆடைகள் உள்ளிட்ட சுமார் 3 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்துள்ளன. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.