Advertisment

டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட ஆந்திர பெண் துணை முதல்வர்... எதிர்கட்சிகள் கொந்தளிப்பு!

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை பதவியில் இருக்கின்றது. அந்த அமைச்சரவையில் ஐந்து துணை முதல்வர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திராவில் மட்டுமே 5 துணை முதல்வர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐந்து துணை முதல்வர்களில் ஒருவரான புஷ்பா ஸ்ரீவாணி

Advertisment

என்பவர் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisment

இவர் சில தினங்களுக்கு முன்பு, ராயலசீமா முட்டுபிடா ஜெகன் அண்ணா என்ற தெலுங்கு பாடலுக்கு முக பாவனைகளுடன் டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு துணை முதல்வராக இருந்து கொண்டு இப்படி அநாகரிகமாக டிக் டாக் வீடியோ வெளியிடுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயல் என எதிர்கட்சிகள் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe