Advertisment

கல்வி சீர்திருத்த நடவடிக்கையில் அதிரடி காட்டும் முதல்வர் ஜெகன்...அதிர்ச்சியில் தனியார் கல்வி நிறுவனங்கள்!

ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, பதவியேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாகக் கல்வி, இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வரும் முதல்வர் ஜெகன், இவர்களுக்காக பல்வேறு சலுகைகள் கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த திட்டங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆந்திராவில் உள்ள அனைத்து தனியார் தொழிற்சாலைகளும் வேலை வாய்ப்பில் 75 % உள்ளூர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். அந்த வரிசையில் முதல்வர் ஜெகன் பள்ளி மற்றும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் விதமாக மசோதா ஒன்றை நேற்று அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

andhra pradesh cm jaganmohan reddy take education concept all private schools follow govt fees and procedure

இந்த மசோதாவில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைப்படுத்தல், கல்வியின் தரத்தை அதிகரித்தல் போன்றவை இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக உள்ளது. இதற்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுக்கள் பள்ளிகளின் நிலை, கல்வியின் தரம் மற்றும் மாணவர்களின் செயல்களைக் கண்காணிக்கும். இது குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, "ஆந்திர மாநிலத்தில் கல்வி ஒழுங்குபடுத்தும் ஆணையத்தின் தலைவராக முன்னாள் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். கல்விக் கட்டணத்தைத் தாண்டி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் கல்வியின் தரம், மாணவர்கள் சேர்க்கை போன்றவற்றையும் இந்தக் குழு கண்காணிக்கும் என தெரிவித்தார். அதே போல் நமது கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைவரும் சொந்தமாக கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

andhra pradesh cm jaganmohan reddy take education concept all private schools follow govt fees and procedure

Advertisment

அவற்றில் எல்.கே.ஜி, யூகே.ஜி வகுப்புகளுக்கு லட்சக்கணக்கில் கூட பணம் வசூலிக்கப்படுகிறது. இனி ஆந்திராவில் கல்வி வியாபாரமாகாது. அதைத் தடுக்கவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெகனின் அதிரடி அறிவிப்பால் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்களும் ஆந்திர மாநிலத்தில் கல்வி நிறுவனங்களை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர மாநில முதல்வரின் செயல்பாடுகளை கண்டு பல்வேறு மாநில முதல்வர்களும் வியப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

schools and colleges fees fixed government create teams education system. modified CM JAGANMOHAN REDDY Andhra Pradesh India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe