ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்,ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றார். இருப்பினும் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் பதவியேற்றது. அதில் 25 அமைச்சர்கள், ஆந்திர மாநிலத்தின் 5 பேர் துணை முதல்வராக பதவியேற்றனர். இந்த அமைச்சரவையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நடிகை ரோஜா இடம் பெறவில்லை. இதனால் ரோஜாவின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Advertisment

ANDHRA GOVERNMENT PROVIDE ONE POSTING FOR ROJA

ஆந்திர அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் அரசின் தொழிற்சாலைகள் உட்கட்டமைப்பு கழகத்தின் தலைவர் பொறுப்பை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவிற்கு வழங்கினார். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆந்திர மாநில அரசின் மிகப்பெரிய துறையில் தொழிற்சாலை உட்கட்டமைப்பு கழகம் முக்கிய பங்கை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.