ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டியின் தாய்மாமாவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான சுப்பா ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஆந்திர மாநில அரசு நேற்று வெளியிட்டது. ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் டாக்டர் மன்மோகன் சிங் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்தார். திருப்பதி தேவஸ்தான தலைவராக இன்று சுப்பா ரெட்டி பதவியேற்க உள்ளார். திருப்பதி தேவஸ்தான கமிட்டியின் மற்ற உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

YV SUBBA REDDY TIRUMALA TIRUPATI DEVASTHANAMS BOARD CHAIRMAN

திருப்பதி தேவஸ்தான தலைவர் பதவி ஒரு நியமன பதவி ஆகும். இந்த பதவி கேபினட் அந்தஸ்துக்கு சமமானதாக கருதப்படுகிறது. ஆந்திர மாநில அரசின் மிகவும் செல்வாக்கு மிக்க பொறுப்புகளில் ஒன்றாக ஆந்திராவில் தேவஸ்தான தலைவர் பொறுப்பு விளங்குகிறது. ஆந்திர மாநில முதலவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது அரசின் நிர்வாகத்தில் உள்ள முக்கிய பொறுப்புகளில் தனது நெருங்கிய உறவினர்களுக்கு இடமளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.