Advertisment

அழுகிய உடலை சுமந்த பெண் துணை ஆய்வாளர்: குவியும் பாராட்டுக்கள்!

andhra si carriying dead body

ஆந்திராமாநிலம்அதிவிக்கொத்துரு கிராமத்தில் வயதானமுதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றிதகவல் கிடைத்ததும், அந்தப் பகுதியில் காவல்துறை துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஸ்ரீஷா, முதியவர்உடல் கிடந்தபகுதிக்குவிரைந்து சென்றுபார்வையிட்டார். அப்போது அந்த முதியவர், அந்தப் பகுதியில்பிச்சை எடுத்து வந்தவர் என்பதுதெரியவந்தது.

Advertisment

இதனையடுத்து முதியவர்உடலைஅங்கிருந்துஎடுத்துச் சென்றுஇறுதி சடங்கு செய்ய எண்ணினார். ஆனால் முதியவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால்யாரும் அருகில் வர தயாராக இல்லை. இதனையடுத்து ஸ்ரீஷாவேமுதியவரின் உடலை, சுமார்1 கிலோமீட்டருக்கு மேல் சுமந்து சென்று, ஆதரவற்றவர்களுக்கு இறுதி சடங்கு செய்யும்அறக்கட்டளையிடம் ஒப்படைத்தார்.

Advertisment

ஸ்ரீஷாவின் இந்தச் செயலுக்குபாராட்டுகள் குவிந்துவருவதோடு, அவர் முதியவரின் உடலைத் தூக்கி செல்லும்புகைப்படமும் வைரலாகிவருகிறது. மேலும் துணை ஆய்வாளர் ஸ்ரீஷாவின் இந்த செயலுக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

Andhra police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe