ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதற்கு பின்பு, அம்மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவித்தார். அமராவதியை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்புகள் போராட்டமாக மாறி அமராவதி விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

andhra opposition party leaders arrested

இந்நிலையில், 3 தலைநகரங்கள் அமைப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்ய ஆந்திர சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் சட்டசபை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டன. இரு கட்சியினரும் சட்டசபை நோக்கி சென்றபோது, அவர்களை வரவிடாமல் தடுக்க போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். இதில் பெண்கள் உட்பட பலர் காயமடைந்தனர். மேலும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.