உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jk_13.jpg)
மேலும் நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போதைய ஊரடங்கு சூழ்நிலைகளை அறியும் பொருட்டு, தன்னுடைய தொகுதியில் ஆய்வு செய்துள்ளார். அப்போது திடீரென அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவரின் காலை தொட்டு வணங்கினார். அச்சப்படாமல் தொடர்ந்து பணியாற்றும் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவரை வணங்கியதாக அந்த சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)