ADVERTISEMENT

வெங்காயம் வாங்குவதற்காக வரிசையில் நின்றவர் பலி...

05:30 PM Dec 09, 2019 | kirubahar@nakk…

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

வெங்காய உறுதி மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஆந்திர அரசு அம்மாநில மக்களுக்கு உழவர் சந்தைகள் மூலம் மானிய விலையில் கிலோ 25 ரூபாய் என பொதுமக்களுக்கு வெங்காயத்தை விநியோகம் செய்து வருகிறது. இப்படி விற்கப்படும் வெங்காயத்தை வாங்க மக்கள் கூட்டம அலைமோதி வருகிறது.

அந்த வகையில் ஆந்திர மாநிலம் குடிவாடா பகுதியைச் சேர்ந்த சம்பி ரெட்டி என்பவர் அப்பகுதி சந்தையில் அரசு வழங்கும் வெங்காயத்துக்காக வரிசையில் காத்திருந்துள்ளார். நீண்ட நேரம் காத்திருந்த சம்பி ரெட்டி திடீரென மயக்கமடைந்து சரிந்து விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருதய கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT