/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andhra_0.jpg)
இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்தநிலையில்ஆந்திர மாநிலத்திலும் கரோனாபரவல் அதிகரித்து வருகிறது.
ஆந்திராவில்நேற்று ஒரேநாளில்20 ஆயிரம் பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில்கரோனாபரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன்,மதியம் 12 மணியிலிருந்து காலை 6 மணி வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். மதியம் 12 மணிக்கு மேல், அத்தியாவசிய சேவைகளுக்குமட்டுமே அனுமதி என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு 14 நாட்களுக்கு அமலில்இருக்குமெனத் தெரிவித்துள்ள ஜெகன் மோகன், ஊரடங்கின்போது 144 தடை உத்தரவு அமலில் இருக்குமென்றும் கூறியுள்ளார். ஆந்திராவில்ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)