ஆந்திரா மாநில சட்டசபையில் அமைச்சராகவும், பின்னர் சபாநாயகராகவும் பதவி வகித்த கோடல சிவபிரசாத் ராவ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

andhra former speaker passed away

என்.டி.ஆர் ஆட்சிக்காலத்தின் ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராகவும், பின்னர் கடந்த முறை தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் சபாநாயகராகவும் பணியாற்றியவர் சிவபிரசாத் ராவ். இவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். அப்போது அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் சபாநாயகர், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி என்று பெயரெடுத்த சிவபிரசாத் ராவ் தற்கொலை செய்துகொண்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.