Advertisment

செல்ஃபி எடுக்க முயன்று உயிரை விட்ட இளம் பெண்...

சுற்றி பார்ப்பதற்காக கோவா கடற்கரைக்கு சென்றிருந்த இளம் பெண் ஒருவர் கடற்கரை அருகே நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த போது அலைகளால் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

andhra doctor lost her life in goa during taking selfie

ஆந்திராவை சேர்ந்த ரம்யா கிருஷ்ணா என்ற இளம் பெண் கோவா அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிகிறார். நேற்று மாலை கோவா கடற்கரைக்கு சென்ற அவர் அங்கு அலைகளுக்கு நடுவே நின்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென பெரிய அலை வந்த நிலையில் அந்த அலையில் அவர் அடித்து செல்லப்பட்டார். அலையின் சுழலில் சிக்கிய அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

Advertisment

அவரது உடலை அப்பகுதியை சேர்ந்த மீனவர்களும் காவல்துறையினரும் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அவருடைய உடல் இன்று காலை அவருடைய சொந்த ஊருக்கு இறுதிச் சடங்குகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவம் படித்து இளம் வயதிலே அரசு மருத்துவராக சேவையாற்றி வந்த இளம் பெண் செல்ஃபி மோகத்தால் உயிரிழந்த சம்பவம் அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Selfie Andhra Goa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe