ys sharmila

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற முதல்வர்களில் ஒருவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. அவரின் மறைவிற்குப் பிறகு, தற்போது அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக இருந்து வருகிறார். இவரது தங்கை சர்மிளா, தெலங்கானாவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளார்.

Advertisment

தனது தந்தையின் பிறந்தநாளான ஜூலை 8ஆம் தேதி, புதிய கட்சியைத் தொடங்கவுள்ள சர்மிளா,தெலங்கானாவில் காலியாக உள்ள 1.91 லட்சம் பணியிடங்களை நிரப்பக் கோரி, அம்மாநிலத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Advertisment

இந்தநிலையில்தெலங்கானா போலீஸார், போராட்டம் நடத்த அவருக்கு ஒருநாள்மட்டுமே அனுமதி வழங்கினர். இருப்பினும் சர்மிளா, மேலும் இரண்டு நாட்கள் போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும்என வலியுறுத்தினார். ஆனால் இதற்குஅனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன், தலைமை செயலகம் நோக்கி, நடைபயணம் மேற்கொள்ள முயன்றார். இதனையடுத்து, போலீஸார்அவரை தடுப்புக்காவலில் கைதுசெய்து, பின்னர் தெலங்கனாவில் உள்ள அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று விடுவித்தனர்.

இருப்பினும் வீட்டிற்குவெளியே அமர்ந்து போராட்டத்தைதொடர்ந்த அவர், சொன்னபடியே மூன்று நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment