தெலுங்கானாவில் கே.சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வரும்,ஓய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவருமான ஜெகம் மோகன் ரெட்டியின் சகோதரியுமானஷர்மிளாஅரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.ஓய்.எஸ்.ஆர் தெலுங்கான கட்சியைத் தொடங்கி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை விமர்சித்தும், கடுமையாக எதிர்த்தும் போராட்டங்கள்நடைப்பயணம்எனத்தொடர்ந்து பயணித்து வருகிறார்.
இந்த நிலையில் அம்மாநிலஅரசுப்பணியாளர்தேர்வாணையம்நடத்தும் தேர்வின் வினாத்தாள்கசிந்து பெரும்பரபரப்பைக்கிளப்பியது. இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தைத் தீவிரமாகக்கையில் எடுத்துள்ளஷர்மிளா,சிறப்புப்புலனாய்வு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்நடத்தத்திட்டமிட்டு அலுவலகம் நோக்கி தனதுகாரில் சென்றார். இதனை அறிந்த தெலுங்கானபோலீசார்ஷர்மிளாவின்காரை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்தஷர்மிளாபணியிலிருந்தபெண் காவலரின் கன்னத்தில் ஓங்கிபளார்என்று அறைந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரியிடமும்ஷர்மிளாவாக்குவாதத்தில்ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்துஷர்மிளாகைது செய்யப்பட்டார். இது ஒருபுறமிருக்கக்கைது செய்யப்பட்டுபோலீஸ்காவலில் இருக்கும்ஷர்மிளாவைபார்க்க அவரது தாய் விஜயம்மா ஜூப்ளிஹில்ஸ்காவல்நிலையத்திற்குச்சென்றார். ஆனால்ஷர்மிளாவை பார்க்கபோலீசார் அனுமதிக்காததால் விஜயம்மாவும் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தன்னை தடுத்து நிறுத்திய பெண் காவலரை விஜயம்மா தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில்போலீசாரைஅறைந்தஷர்மிளாவை14 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.