Advertisment

அந்தமானில் மூன்று தீவுகளின் பெயர்களை மாற்றும் மத்திய அரசு

sdfv

Advertisment

அந்தமானில் உள்ள மூன்றுசிறிய தீவுகளின் பெயர்களை வரும் 30 ஆம் தேதி மத்திய அரசு மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் உலக போரின் பொழுது ஆங்கிலேயர் கைவசம் இருந்த அந்தமானை ஜப்பான் படைகள் கைப்பற்றியதையடுத்து, 1943, டிசம்பர் 30 ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அந்தமானில் உள்ள ஒரு தீவில் இந்திய கொடியினை ஏற்றினார். இதனை நினைவுகூறும்விதமாக வரும் 30 ஆம் தேதி அந்த தீவின் பெயர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என பெயர்மாற்றப்பட உள்ளது. மேலும் அதனை சுற்றியுள்ள இரண்டு தீவுகளும் பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளன. அதன்படி அந்த தீவுகளுக்கு ஸ்வராஜ் தீவு மற்றும் ஷாஹித் தீவு என பெயரிடப்பட உள்ளன.

andaman and nicobar island
இதையும் படியுங்கள்
Subscribe