ADVERTISEMENT

இந்தியாவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி!

07:41 AM Dec 07, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை உலக நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இருந்தும் இந்தியாவில் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே, கர்நாடகாவில் 2 பேருக்கும், மஹாராஷ்ட்ரா - 8, குஜராத் - 1, டெல்லி - 1 ராஜஸ்தான் - 9 என இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 21ஆக இருந்த நிலையில், தற்போது மஹாராஷ்ட்ராவில் மேலும் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் இந்தியாவில் இன்று (07.12.2021) காலை நிலவரப்படி இதுவரை ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT