’இளம் வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றியவர் அனந்தகுமார்’-பிரதமர் இரங்கல்

an

மத்திய ரசாயணம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார்(வயது59) புற்றுநோயினால் இன்று அதிகாலை 5 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.

அனந்தகுமாரின் மறைவால் கர்நாடக மாநில பாஜகவினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், அனந்தகுமார் மறைவால் மிகவும் துயரம் அடைந்துள்ளேன் என்று பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மேலும், இளம் வயதில் பொதுவாழ்க்கைக்கு வந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வந்தார். அனந்தகுமார் மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் இரங்கலில் தெரிவித்துள்ளார்.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் இணைந்து அரசியல் வாழ்வை தொடங்கியவர் அனந்தகுமார். 1987ல் பாஜகவில் இணைந்த அனந்தகுமார் கர்நாடக மாநில இளைஞரணி தலைவரானார். பெங்களூரு தெற்கு தொகுதியில் இருந்து 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Ananthakumar's death - Prime Minister Modi's condolences
இதையும் படியுங்கள்
Subscribe