ADVERTISEMENT

அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்; உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீட்டா அம்பானி 

02:24 PM Jan 20, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த விழாவானது மும்பையில் நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கியது. குஜராத் இந்துக்கள் பின்பற்றும் பாரம்பரிய சடங்குகள் மற்றும் சமய முறைப்படி நிச்சயதார்த்த விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆனந்தும் ராதிகாவும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்துகொண்டனர். அதன் பின்னர் அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்களிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து, நீட்டா அம்பானி விழாவில் நடனமாடி அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவரது நடனம் அங்கு இருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த விழாவில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT