Advertisment

அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்; உறவினர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீட்டா அம்பானி 

anant ambani and radhika merchant engagement

இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்மற்றும் பணக்காரர்களில் ஒருவரானமுகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானி தம்பதிகளின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் தம்பதியின் மகளான ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

Advertisment

இந்நிலையில் இவர்களின்திருமண நிச்சயதார்த்த விழாவானது மும்பையில் நேற்று இரவு 7 மணியளவில்தொடங்கியது. குஜராத் இந்துக்கள் பின்பற்றும் பாரம்பரிய சடங்குகள்மற்றும் சமய முறைப்படி நிச்சயதார்த்தவிழா வெகு சிறப்பாகநடைபெற்றது. விழாவில் ஆனந்தும் ராதிகாவும் மோதிரம் மாற்றிதிருமணம் செய்து கொள்வதைஉறுதி செய்துகொண்டனர். அதன் பின்னர் அங்கு இருந்த குடும்பஉறுப்பினர்களிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Advertisment

நிச்சயதார்த்தத்தைதொடர்ந்து, நீட்டாஅம்பானி விழாவில் நடனமாடிஅங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இவரது நடனம்அங்கு இருந்தவர்களைவெகுவாக கவர்ந்தது. இந்த விழாவில் முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Mumbai engagement
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe