ADVERTISEMENT

Work From Home பரிதாபங்கள்...விஜயகாந்த் மீமை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா...

11:14 AM Apr 06, 2020 | kirubahar@nakk…


இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களின் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா, Work From Home குறித்து பதிவிட்ட மீம் ஒன்று தமிழகத்தில் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது.2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 4000 க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக் கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களிலும் Work From Home எனப்படும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதியும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

இந்த Work From Home குறித்து பல மீம்கள் இணையத்தில் தொடர்ந்து உலவிக்கொண்டே தான் இருக்கின்றன.அந்த வகையில் இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா பதிவிட்ட மீம் இன்று தமிழக இணையவாசிகளிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. Work From Home எதிர்பார்ப்பும், உண்மையும் என்ற அந்த மீமில், எதிர்பார்ப்பில் விஜயகாந்த் கோட் போட்டுகொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படமும், உண்மை நிலவரத்தில் லுங்கியுடன் ஒருவர் பணியாற்றும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதனைப் பதிவிட்ட ஆனந்த் மஹிந்திரா, "இது எனக்கு வாட்ஸப்பில் வந்தது. 'வீட்டிலிருந்து சில வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளும்போது, நான் என் சட்டையின் கீழ் லுங்கி தான் அணிந்திருப்பேன்.ஏனெனில் இந்த மீட்டிங்கின் போது எழுந்து நிற்க வேண்டிய அவசியமே இல்லை' எனக் கூறுகின்றனர். ஆனால் இந்த ட்வீட்டிற்குப் பிறகு எனது நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் என்னிடம் இதுகுறித்து கேட்பார்கள் என நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT