Advertisment

"பாகிஸ்தான் வாழ்க" என கோஷமிட்ட பெண்... காவல்துறை அதிரடி நடவடிக்கை...

கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களில் சில இடங்களில் வன்முறையும் வெடித்தது. இருப்பினும் நாடு முழுவதும் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Advertisment

Amulya was charged with sedition case and sent to judicial custody

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய பெண் ஒருவர் "பாகிஸ்தான் வாழ்க" என கோஷமிட்டார்.

அவரை தடுத்து நிறுத்தி ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அந்தப் பெண் மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதுமிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அந்த பெண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

caa owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe