குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரான பேரணியில், "பாகிஸ்தான் வாழ்க" என தனது மகள் கோஷமிட்டது தவறு என கோஷமெழுப்பிய அமுல்யாவின் தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.

Advertisment

amulya father about her speech

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கடந்த டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூருவில் பேரணி நடைபெற்றது. இதில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார். அவர் மேடையில் அமர்ந்திருக்கும்போது, பொதுமக்கள் மத்தியில் பேசிய அமுல்யா என்ற பெண் "பாகிஸ்தான் வாழ்க" என கோஷமிட்டார்.

Advertisment

அவரை தடுத்து நிறுத்தி ஓவைசி உள்ளிட்டோர் முயன்றனர். எனினும் அமுல்யா மைக்கை கொடுக்காமல் தொடர்ந்து கோஷம் எழுப்பினார். இதுமிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அந்த பெண் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையயடுத்து அமுல்யா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அந்த பெண்ணின் தந்தை, "எனது மகள் அமுல்யா அப்படி பேசியது தவறு. அவள் அண்மைக்காலமாக சில இஸ்லாமிய அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை" என தெரிவித்துள்ளார்.