Advertisment

கடல்போல காட்சியளிக்கும் கொல்கத்தா விமானநிலையம்... 'அம்பன்' புயலின் கோரத்தாண்டவம்...

amphan effects in west bengal

'அம்பன்' புயல் நேற்று மேற்குவங்கத்தில் கரையைக் கடந்த நிலையில், இப்புயலின் கோரத்தாண்டவத்தால் அம்மனும் முழுவதும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.

Advertisment

'அம்பன்' புயல் மேற்கு வங்கத்தின் திஹா, வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், நேற்று மாலை இந்தப்புயல் கரையைக் கடந்தது. முதலில் தமிழகத்தைத் தாக்கலாம் எனக்கூறப்பட்ட நிலையில்வடக்கு நோக்கி நகர்ந்து மேற்குவங்கத்தில் கரையேறி உள்ளது. நேற்று மாலை இப்புயல் கரையேறிய போது மேற்குவங்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக் காற்றுடன் கடும் மழையும் பெய்தது. மணிக்குச் சராசரியாக 155 கி.மீ. முதல் 165 கி.மீ. வேகத்தில் வீசிய காற்று வீடுகள், மரங்கள், மின்கோபுரங்கள் உள்ளிட்டவற்றைத் தூக்கிவீசியது. இந்தப் புயலால் 12 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா நகரின் பல பகுதிகள் இந்த மழை காரணமாக வெள்ளக்காடாக மாறியுள்ளன. அந்த வகையில் கொல்கத்தா விமானநிலையம் முழுவதும் நீர் சூழ்ந்து காணப்படும் நிலையில், அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானங்கள் பலவும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

Advertisment

west bengal amphan cyclone
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe