டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கரோனா தொற்று இருப்பது கடந்த இரண்டாம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அமித்ஷா பூரண குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பிய அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், தொடர் சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை குணமடைந்ததை தொடர்ந்து அவர் இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.