Advertisment

குணமடைந்தார் அமித்ஷா.. மருத்துவமனை தகவல்...

amitshah has recovered says delhi aiims

உடல்நலக்கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு அமித்ஷா பூரண குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால், வீடு திரும்பிய அவருக்கு சுவாசிப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

Advertisment

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா குணமடைந்தார்; விரைவில் அவர் டிஸ்சார் செய்யப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona virus AmitShah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe