நேற்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஒன்று கூடி யோகா செய்தனர். அது போல ராணுவ அதிகாரிகளுடன் நாய்களும் இணைந்து யோகா செய்யும் புகைப்படம் நேற்று வெளியானது.

amitshah gives reply to rahul gandhi's mocking twitter post about yoga day

Advertisment

Advertisment

இதனை தனது ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "'புதிய இந்தியா" என தலைப்பிட்டிருந்தார். ராகுலின் இந்த ட்வீட்டுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘காங்கிரஸிடம் எதிர்மறையான சிந்தனைகளே அதிகம் இருப்பது தொடர்ந்து உறுதியாகியுள்ளது. முத்தாலக் சட்டத்தை எதிர்க்கிறார்கள். இப்போது ராணுவத்தையும் அவர்கள் அவமானப்படுத்துகிறார்கள். இனிமேலாவது அவர்களுக்கு நேர்மறையான எண்ணம் தோன்றட்டும். கடுமையான சவால்களை அவர்கள் வெளியே வந்து எதிர்கொள்ள முடியும்’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுபோல், ராகுலையும், காங்கிரஸையும் பாஜகவினர் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.