தனது உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் பரவிவந்த வதந்திகளுக்கு அறிக்கை மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் அமித்ஷாவின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகள் பரவியது.இந்நிலையில் இந்த வதந்திகளை அடியோடு மறுத்துள்ள அமித்ஷா, தான் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில், "உலக பெருந்தொற்றான கரோனாவுக்கு எதிராக நமது நாடு போராடி வருகிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதால், நானும் இந்த பணிகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபட்டுள்ளேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் கவனம் கொடுப்பதில்லை. எனது கவனத்திற்கு இவை வந்தபோது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று நான் கருதினேன். எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
ஆனால், கடந்த இரு தினங்களாக எனது கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர். அவர்களின் வருத்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.