பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அகமதாபாத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் கலந்து கொன்டு பேசினார்.
அதன்பின் அந்த கூட்டத்திற்கு வந்திருந்த தனது பேத்திக்கு பாஜக சின்னம் பதித்த தொப்பியை தலையில் அணிவிக்க முயற்சித்தார். அப்போது அவரது பேத்தி அந்த தொப்பியை தள்ளிவிட்டு ஏற்கனவே அணிந்திருந்த வேறு தொப்பியை அணிந்து கொண்டது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அகமதாபாத்தில் நடந்த இந்த பேரணிக்கு பிறகு அமித் ஷா காந்திநகர் தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார்.