Advertisment

"சரியான பதிலடி"- உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித்ஷா கருத்து...

ரஃபேல் வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, ஆதாரமற்ற தகவல்களை பரப்பியவர்களுக்கு சரியான பதிலடி என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Advertisment

amitshah about rafael verdict

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுத்தது.

இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, "ரஃபேல் ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு, ஆதாரமற்ற தகவல்களை பரப்பியவர்களுக்கு சரியான பதிலடி. இதன் மூலம் மோடி அரசு வெளிப்படையான, ஊழலற்ற அரசு என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரஃபேல் தொடர்பாக அமளி செய்து நாடாளுமன்றத்தை சீர்குலைப்பது ஒரு மோசடி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் மக்களின் நலனுக்காக சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்கு பிறகாவது காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தலைவர்கள் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறியுள்ளார்.

Amit shah Rafale
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe