Skip to main content

"ஒரு அங்குலம் கூட பாஜக பின்வாங்காது" எதிர்கட்சிகளை சாடிய அமித்ஷா...

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார்.

 

amitshah about caa in jodhpur

 

 

ஜோத்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தாலும், குடிமக்கள் திருத்தம் தொடர்பான இந்த பிரச்சினையில் பாஜக ஒரு அங்குலம் கூட பின்வாங்காது. நீங்கள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை நீங்கள் பரப்பலாம். வாக்கு வங்கி அரசியலுக்காக வீர் சாவர்க்கர் போன்ற ஒரு சிறந்த ஆளுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி பேசுகிறது. காங்கிரஸ்காரர்கள் தங்களை நினைத்து வெட்கப்பட வேண்டும். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு பதிலாக, கோட்டாவில் தினமும் இறந்து கொண்டிருக்கும் குழந்தைகள் மீது முதலில் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் அக்கறை காட்டுங்கள், தாய்மார்கள் உங்களைச் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்" என பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்” - ப.சிதம்பரம் திட்டவட்டம்!

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
The Citizenship Amendment Act will be repealed says p Chidambaram

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “வேலையின்மை இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால் ஆகும். சில பிரிவினர் இந்த பிரச்சனையை குறைத்து மதிப்பிடுகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய பிரச்சனை. எனது அனுபவத்தில் இவ்வளவு பெரிய வேலையின்மை விகிதம் இருந்ததில்லை.

தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது, உழைக்கும் மக்கள் தொகை குறைந்துள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும் பட்டதாரிகளிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது. அதாவது வேலையின்மை 42% ஆக உள்ளது. பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் பொறியாளர்களின் அவமானகரமான நிகழ்வு இதுவாகும்.

பல்வேறு சட்டங்களின் தொகுப்புகளை நாங்கள் ரத்து செய்வோம், திருத்துவோம் மற்றும் மதிப்பாய்வு செய்வோம். அதில் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விவசாயிகளின் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வசதிச் சட்டம் 2020,  இந்திய தண்டணைச சட்டத்திற்கு (IPC) இணையான பாரதிய நியாய சன்ஹிதா,  கிரிமினல் தண்டனைச் சட்டம் (CrPC) என்ற பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் ஆதாரச் சட்டமான பாரதிய சாக்ஷ்யா சட்டம்.

இந்த ஐந்து சட்டங்களும் முற்றிலுமாக ரத்து செய்யப்படும். பின்னர் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும். அப்போது 25 சட்டங்கள் திருத்தப்பட்டு அரசியலமைப்புக்கு இணையாக கொண்டு வரப்படும். எனவே குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார். 

Next Story

“ரத்து செய்வதற்குப் பதிலாக மேம்படுத்தியிருக்கலாம்...” - உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித்ஷா

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Amit Shah on the Supreme Court verdict for electoral bonds

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவலை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் பாரத் ஸ்டேட் வங்கி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி தரப்பில் நேரம் கேட்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தேதியை நிர்ணயித்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. மேலும் தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், வாங்கிய தேதி வாங்கிய தொகை ஆகியவை விவரங்களாக தேர்தல் ஆணையத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் பென்டிரைவ் வடிவில் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எஸ்பிஐ வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல் பத்திரம் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைகள் குறித்த தகவல்கள் வெளியானது. 

இதையடுத்து, தேர்தல் பத்திர விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (15-03-24) உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேர் கொண்ட அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது சீலிடப்பட்ட கவரில் தேர்தல் பத்திரம் தொடர்பான தகவல்களைத் தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது. தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களை ஏன் வெளியிடவில்லை? என எஸ்பிஐக்கு கேள்வி எழுப்பினர். தீர்ப்பில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்க சொல்லியிருந்தோம் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் பத்திர எண்களையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தில் பா.ஜ.க.வை காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. 

இந்த நிலையில், தேர்தல் பத்திரம் ரத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்திய அரசியலில் கறுப்புப் பணத்தின் செல்வாக்கை ஒழிக்க தேர்தல் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் முழுமையாக மதிக்கிறேன். ஆனால், தேர்தல் பத்திரங்களை முற்றிலுமாக ரத்து செய்வதற்குப் பதிலாக, அதை மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 

பாஜக ஆட்சியில் இருப்பதால் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தால், பா.ஜ.க பலனடைந்ததாக ஒரு கருத்து நிலவுகிறது. இது உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் என்றும் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். இவருக்கு யார் இதை எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கிடைத்தது. மொத்த அரசியல் கட்சிகளின் பத்திரங்கள் எண்ணிக்கை ரூ.20,000 கோடி. அப்படியென்றால் மீதி ரூ.14,000 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் எங்கே போனது?” என்று கூறினார்.