வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இதனை கொண்டாடும் விதத்தில் பாஜக ‘சேவா சப்தா’ என்று ஒரு நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது. அதவாது பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப் 14 முதல் செப் 20 வரை சேவை செய்ய பாஜக தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisment

amitsha

இதன் முதல் கட்டமாக இன்று தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சருமான அமித்ஷாவும், பாஜகவின் செயல் தலைவர் ஜேபி நட்டாவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேவை செய்து வருகின்றனர்.

Advertisment

இன்று காலை எட்டு மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்வின் முதல் கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கும், நோயாளிகளுக்கும் பழங்கள் கொடுத்தனர். இதனையடுத்து அமித்ஷாவும், ஜேபி நட்டாவும் மருத்துவமனை வராண்டாவை கூட்டி துடைத்து சேவை செய்து வருகின்றனர். தற்போது அந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

கடந்த வருடம் பிரதமர் மோடி தன்னுடைய பிறந்தநாளை இராணுவ வீரர்களுடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.