ராஜஸ்தானில் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தேசிய கட்சிகளும் அந்த மாநிலத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நரேந்திர மோடியும், காங்கிரஸுக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் அந்த மாநிலத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டுவிட்டனர்.

Advertisment

இந்நிலையில், பாஜக வேட்பளார்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று களத்தில் இறங்கியுள்ளார். உதைபூரில் பலருடன் சேர்ந்து பிரமாண்ட பேரணியை தலைமை தாங்கி செல்கிறார்.

Advertisment