‘அவர் கைது செய்யப்படவே இல்லை’- அமித்ஷா விளக்கம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று காலை 11.00 மணிக்கு மாநிலங்களவையில் அறிவித்தார். மேலும் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

amitsha jk

இதனையடுத்து இன்று காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை நடைபெறுவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்டப்பிரிவு 370 ஐ நீக்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து காரசாரமாக இதுகுறித்த விவாதம் அங்கு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, முப்தி மெஹபூபா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பல தலைவர்களும் அவர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார்கள்.

மக்களவையில் ஃபரூக் அப்துல்லா எங்கே என தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமித்ஷா, “ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை; அவர் தனது வீட்டில் தான் இருக்கிறார்” என்று கூறினார்.

amithsha amithshah jammu and kashmir kashmir
இதையும் படியுங்கள்
Subscribe