Advertisment

’ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை’-அமித்ஷா

a

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அத்திட்டத்தினை ஆதரித்து, பாஜக சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருத்தப்பட்ட குடியுரிமை திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தொடங்கி வைத்தார்.

Advertisment

இவ்விழாவில் பேசிய அமித்ஷா, ‘’குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு வந்தாலும் இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து அரசு பின்வாங்கப் போவதில்லை. எதிர்க்கட்சிகள் விரும்பும் அளவுக்கு தவறான தகவல்களை பரப்பலாம். திருத்தப்பட்ட இந்த சட்டம், யாரிடம் இருந்தும் இந்திய குடியுரிமையை பறிக்காது’’என்று தெரிவித்தார்.

amithshah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe